/* */

21வது முறையாக 102 அடியை எட்டிய பவானிசாகர் அணை; 6,772 கன அடி நீர் திறப்பு

Bhavanisagar Dam Water Level Today In Tamil- பவானிசாகர் அணையில் 21வது முறையாக 102 அடியை எட்டியதால், அணைக்கு வரும் 6,772 கன அடி உபரிநீர் அப்படியே ஆற்று மதகுகளில் திறந்துவிடப்படுகிறது.

HIGHLIGHTS

21வது முறையாக 102 அடியை எட்டிய பவானிசாகர் அணை; 6,772 கன அடி நீர் திறப்பு
X

பவானிசாகர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு.

Bhavanisagar Dam Water Level Today In Tamil- நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த கன மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று 102 அடியை எட்டியது.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணி அணைகளின் விதிதொகுப்புபடி ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 102 அடிக்கு மேல் வெள்ளநீரை தேக்கி வைக்க இயலாது என்பதால் அணைக்கு வரும் 6 ஆயிரத்து 772 கனஅடி உபரிநீர் அப்படியே ற்று மதகில் திறந்துவிடப்பட்டது.வருவாய் மற்றும் காவல்துறை சார்பில் ஆற்றில் துவைக்கவே, குளிக்கவோ கூடாது என்றும் தாழ்வான பகுதியில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.

பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் வெள்ளநீர் பவானிசாகர், சத்தியமங்கலம், பெரிய கொடிவேரி, வழியாக பவானிகூடுதுறை சென்றடைந்து காவிரி ஆற்றில் கலப்பதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 1955ஆம் ஆண்டு பவானிசாகர் அணை கட்டப்பட்ட காலத்தில் இருந்து 21ஆவது முறையாக அணை 102 அடியை எட்டியுள்ளது. இதனால் கீழ்பவானி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 Aug 2022 4:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  5. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  10. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?