/* */

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 528 கன அடியாக உள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X

பவானிசாகர் அணை (பைல் படம்)

ஈரோடு மாவட்டத்தில் முக்கிய அணையாக விளங்குவது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணையாகும்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது. இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது.

பவானிசாகர் அணையின் இன்றைய (22.01.2023) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 101.61 அடி ,

நீர் இருப்பு - 30.00 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 528 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர்வரத்து 1,218 கன அடி) ,

நீர் வெளியேற்றம் - 2,750 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 1,500 கன அடி நீரும், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 1,100 கன அடி, பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து 2,750 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 22 Jan 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...