/* */

JKKN கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா உற்சாக கொண்டாட்டம்

jkkn educational institutions, pongal festival celebration குமாரபாளையம் JKKN கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள், ஆசிரிய ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் என அனைவரும் பாரம்பரிய உடையில் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

HIGHLIGHTS

JKKN  கல்வி நிறுவனங்களில்   பொங்கல் விழா  உற்சாக கொண்டாட்டம்
X

குமாரபாளையம் ஜேகேஎன்என் கல்வி நிறுவனங்களில் நடந்த பொங்கல்விழா போட்டிகளில்  முதலாமிடம்  பெற்ற பல்மருத்துவக்கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு  பரிசுகளை கல்விநிறுவனத் தலைவர் என். செந்தாமரை, நிர்வாகி  ஓம்சரவணா ஆகியோர் வழங்கினர். 

jkkn educational institutions, pongal festival celebration


குமாரபாளையம் JKKN கல்விநிறுவனங்களில் நடந்த பொங்கல்விழா போட்டிகளில் இரண்டாம் பரிசினை பார்மசி கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்குழுமத்தலைவர் என்.செந்தாமரை,நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா ஆகியோர் வழங்கினர்.

jkkn educational institutions, pongal festival celebration

குமாரபாளையம் JKKN கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழாவானது வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவானது ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் அனைவரும் இப்பண்டிகையினை தொடர்ந்து 4 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவர். அந்த வகையில் எல்லோருடைய இல்லத்திலும் கரும்பு இருபுறமும் வைத்து நடுவில் பொங்கல் பானையிட்டு சூர்யபகவானை வணங்கி பொங்கலிடுவர். அந்த பொங்கலானது பொங்கும்போது குலவிச்சத்தத்தினை எழுப்பி பெண்கள் ஆரவாரத்தோடு உற்சாகமாக வரவேற்று மகிழ்வர். உற்றார்,உறவினர்கள் , குடும்பத்தார் என அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்கலை உண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கமான நிகழ்வாகும்.

jkkn educational institutions, pongal festival celebration


குமாரபாளையம் JKKN கல்விநிறுவனங்களில் நடந்த பொங்கல்விழா போட்டிகளில் மூன்றாம் பரிசினை கலைஅறிவியல் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்குழுமத்தலைவர் என். செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா ஆகியோர் வழங்கினர்.

jkkn educational institutions, pongal festival celebration

தமிழகத்தில் உள்ள கல்விநிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகளிலும் பொங்கலை வரவேற்கும் விதமாக அனைவரும் ஒன்று சேர்ந்து ஆண்டுதோறும் பாரம்பரிய உடையில் பொங்கலிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளோடு கொண்டாடுவர்.

அந்த வகையில் குமாரபாளையம் JKKN கல்வி நிறுவனங்களில் ஆண்டுதோறும் பொங்கல்விழாவானது வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் அனைத்து கல்விநிறுவனங்களின் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. தமிழரின் பாரம்பரிய முறைப்படி மண் அடுப்பு, மண்பானை வைத்து, வாழை மரம், தென்னங்கீற்று தோரணம் கட்டி தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை யினை மாணவர்கள் அணிந்து, மாணவிகள் புடவை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.

jkkn educational institutions, pongal festival celebration


குமாரபாளையம்JKKNகல்விநிறுவனங்களில்நடந்தபொங்கல்விழாநிகழ்ச்சியில்கோலப்போட்டிநடந்தது. இதில் ஏராளமான மாணவிகள், பெண்கள் கலந்துகொண்டனர்.

jkkn educational institutions, pongal festival celebration

கல்வி நிறுவன கல்லூரிகளின் சார்பில் தனித்தனியே பொங்கலிட்டு பொங்கல் பானையை வைத்தும் மாணவிகள் கும்மி அடித்தும் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் உறியடித்தல், சிலம்பம், பாட்டுப்போட்டி, நடனப்போட்டி,கோலப் போட்டிகள் நடைபெற்றன.இப்போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் பொங்கல்விழாவை பறைசாற்றும் விதமான பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இப்பொங்கல்விழா நிகழ்ச்சியில் , JKKN பல்மருத்துவக்கல்லூரியானது முதல் பரிசையும், JKKNபார்மசி கல்லூரி இரண்டாவது பரிசையும் , JKKநடராஜா கலைஅறிவியல் கல்லூரி மூன்றாம் பரிசையும் பெற்றன .

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கல்வி நிறுவனங்களின் தலைவர் என்.செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா, ஆகியோர் வழங்கினார்

Updated On: 15 Jan 2023 10:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!