/* */

பவானி அருகே சூறைக்காற்றுடன் கனமழை : 2கோடி மதிப்பிலான வாழை மரங்கள் சேதம்

பவானி அருகே சூறைக்காற்றுடன் கனமழை, வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஒலகடம் பேரூராட்சிக்குட்பட்ட எட்டிக்கொட்டை தாள பாளையம்,கூனாக்கபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சிறு, குறு விவசாயிகள் செவ்வாழை கதலி,நேந்திரம் உள்ளிட்ட வாழை ரகங்களை பயரிட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு இப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக 50ஏக்கர் பரப்பளவிலான 50ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில்,

கதலி,செவ்வாழை,நேந்திரம் வாழை ரகங்களை பயிடப்பட்டிருந்து. நேற்றிரவு பெய்த கன மழையால் 2மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் அடியோடி சரிந்து விழுந்துள்ளது. இதனால் 2கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் விவசாயத்தை தொடர்ந்து செய்ய முடியாத நிலையில் இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் இழப்புகளை வேளாண்மை துறையினர் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். அறுவடைக்கு தாயார் நிலையில் இருந்த வாழைகள் சேதமடைந்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Updated On: 21 Sep 2021 9:57 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?