/* */

ஈரோடு மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம்: 84 ஆயிரம் பேர் பயன்

ஈரோடு மாவட்டத்தில் மெகா கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 84,402 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழகம் முழுவதும் கடந்த 12ஆம் தேதி முதல் முறையாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 19ம் தேதி இரண்டாவது முறையாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அடுட்து, மூன்றாவது முறையாக தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம், நேற்று நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் முதற் கட்ட தடுப்பூசி முகாம் 847 மையங்களில் 97 ஆயிரத்து 198 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இரண்டாவது கட்டமாக நடந்த தடுப்பூசி முகாம் 538 மையங்களில் 48 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டது. நேற்று நடந்த 3-வது கட்ட தடுப்பூசி முகாமில், ஈரோடு மாவட்டத்தில் 579 மையங்களில் நேற்று தடுப்பூசி போடப்பட்டது.

காலை 7 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதற்காக மாவட்டம் முழுவதும் 2300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுப்பட்டனர். 86 வாகனங்கள் முகாமுக்கு பயன்படுத்தப்பட்டன. இந்த முறை தடுப்பூசி போடும் பணியில் கல்லூரி மாணவர்களும் அதிகளவில் பங்கேற்றனர்.மெகா தடுப்பூசி முகாம் மூலம் நேற்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டத்தில் 84 ஆயிரத்து 402 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 27 Sep 2021 6:55 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?