/* */

அடிப்படை வசதிகள் செய்து தர வாய்ப்பில்லை: ஈரோடு மாநகராட்சி அறிவிப்பு

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வாய்ப்பு இல்லை என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

அடிப்படை வசதிகள் செய்து தர வாய்ப்பில்லை: ஈரோடு மாநகராட்சி அறிவிப்பு
X

ஈரோடு மாநகராட்சி அலுவலகம்.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வாய்ப்பு இல்லை என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈரோடு மாநகராட்சி 5-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரனிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர். அதில், ஈரோடு மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட எஸ்.கே. இந்திரன் வீதி, செந்தூர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் எங்கள் பகுதியில் தார் ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பெரும் சிரமமாக உள்ளது. எனவே எங்கள் பகுதியில் தார் ரோடு, கழிவுநீர் சாக்கடை கால்வாய் வசதி மற்றும் தெருவிளக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் அளித்துள்ள விளக்க அறிக்கையில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவில் அரசாணைப்படி, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வாய்ப்பு இல்லை. மனைப்பிரிவில் மனை ஒப்புதல் பெற்று முறையாக சாலைகளை மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே சாலைகள் மற்றும் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 12 July 2023 2:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  2. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  3. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  5. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  6. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  7. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  8. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  9. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...
  10. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!