/* */

அத்தாணி: தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தவர் கைது‌

அந்தியூர் அருகே உள்ள அத்தாணியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அத்தாணி: தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தவர் கைது‌
X
அத்தாணி பேருந்து நிறுத்தம் (பைல் படம்)

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பெரியார் நகரை சேர்ந்தவர் ராசூல்தீன் (வயது 42). இவர் அத்தாணி - கோபி சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக ஆப்பக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் போலீசார் கடையில் சோதனை செய்ததில், 20 பாக்கெட்டுகளில் ரூ.400 மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ராசூல்தீன் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 March 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்