/* */

காலியாக உள்ள 14 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுகோள்

Village Assistant Job -பவானி வட்டத்தில் காலியாக உள்ள 14 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருவாய்த்துறை அழைப்பு விடுத்துள்ளது.

HIGHLIGHTS

காலியாக உள்ள 14 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுகோள்
X

பவானி வட்டாட்சியர் அலுவலகம் பைல் படம்.

Village Assistant Job -பவானி வட்டத்தில் காலியாக உள்ள 14 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என வருவாய்த்துறை அழைப்பு விடுத்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் காலியாக உள்ள 14 மயிலம்பாடி ,25 (அ) கவுந்தப்பாடி, 26 (அ) சலங்கபாளையம், 28 செட்டிபாளையம், 07 கேசரிமங்கலம், 05 சிங்கம்பேட்டை, 23 (ஆ) மேட்டுப்பாளையம் , 25 (இ) கவுந்தப்பாடி, 16 புன்னம், 18 ஒரிச்சேரி, 21 வைரமங்கலம், 26 (ஆ) சலங்கபாளையம், 02 கல்பாவி, 17 ஆப்பக்கூடல் உள்ளிட்ட கிராமங்களில் 14 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வருவாய்த்துறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பவானி தாசில்தார் வி.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இன சுழற்சி அடிப்படையில்,‌ 14 கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பொதுப்பிரிவு, அட்டவணை வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம், 37 வயதுக்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவுக்கு, 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணியிடம் காலியாக உள்ள கிராமத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அல்லது அருகாமையில் உள்ள கிராமம் பவானி வட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு தமிழக அரசின் https:// www.tn.gov.in. வருவாய் நிர்வாகத் துறையின் https://cra.tn.gov.in, வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் https://erode.nic.in ஆகிய இணையதளங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விண்ணப்பதாரர்கள் தேர்வு முறை மற்றும் இதர விபரங்களை ஈரோடு மாவட்ட https://erode.nic.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

இணையதள வழியில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசிநாள்: 07.11.2022 ,

வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனறித் தேர்வு நாள்: 30.11.2022 ,

நேர்முகத் தேர்வுநாள்: 15.12.2022 மற்றும் 16.12.2022 ,

ஊதிய விகிதம் சிறப்பு கால முறை ஊதியம் - ரூ.11,100-35,100 .

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை:- https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-171 என்ற இணையதளத்திற்கு செல்லவும். விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தங்களது புகைப்படம்,கையொப்பம், கல்வித் தகுதிச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமச் சான்றிதழ், சாதிச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ்கள் அனைத்தும் pdf-ல் 256 kb-க்குள் இருக்க வேண்டும். இதற்காக பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் 14-ம் தேதி பரிசீலித்து, முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் 19-ம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை டிசம்பர் 19-ம் தேதி வெளியிட்டு, அன்றே பணி ஆணைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 Oct 2022 9:46 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?