மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார்

பர்கூர் மலைப்பகுதியில் பர்கூர் அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் நீர் கசிவால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார்
X

பள்ளியை ஆய்வு செய்த எம்எல்ஏ வெங்கடாசலம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பர்கூர் மலைப்பகுதியில் பர்கூர் அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் நீர் கசிவால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அந்தியூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை தரம் பார்த்தது மட்டுமின்றி அதனை சாப்பிட்டு பார்த்தார். மேலும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தரமானதாக உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார் மேலும் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் புதிய கட்டிடம் கட்டிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Updated On: 25 Oct 2021 3:00 AM GMT

Related News