/* */

காவேரி நீரேற்று பாசனம் மூலம் ஏரி, குளங்களுக்கு நீர் நிரப்பக் கோரிக்கை

காவேரி நீரேற்று பாசனம் மூலம் ஏரி, குளங்களுக்கு நீர் நிரப்ப வேண்டும் என்று, பொதுப்பணித்துறை உதவி பொறியாளரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

காவேரி நீரேற்று பாசனம் மூலம் ஏரி, குளங்களுக்கு நீர் நிரப்பக் கோரிக்கை
X

அம்மாபேட்டை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முருகேசனிடம்  மனு அளித்த அந்தியூர், பவானி வட்டார ஏழை, நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் நலச் சங்கத்தினர்.

அந்தியூர், பவானி வட்டார ஏழை, நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் நலச் சங்கத்தின் தலைவர் எம்.சுதாகர் மற்றும் செயலாளர் ஏ.ரமேஷ்குமார் ஆகியோர், அம்மாபேட்டை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முருகேசனிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், அம்மாபேட்டை பகுதியில் காவிரி கரையோரப் பகுதியில் இருந்து விவசாயிகளின் தேவைகளுக்காக நீரேற்று பாசன சங்கம் சார்பில் நீரேற்று நிலையம் அமைத்து, சென்னம்பட்டி, குருவரெட்டியூர் பகுதிக்கு காவிரி நீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நீரானது நீரேற்று பாசன சங்கத்தினர் தங்களது சொந்த நிலங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். சங்க விதிப்படி உபரி நீரை அருகில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நிரப்ப வேண்டும்.

எனவே, சென்னம்பட்டி மற்றும் குருவரெட்டியூர் நீரேற்றுப் பாசன சங்கத்தினர், அம்மாபேட்டை அருகே உள்ள கன்னப்பள்ளி கிராமம், பி.கே.புதூர் பகுதியில் அமைந்துள்ள சிறிய ஏரி, சுடுகாட்டு ஏரி, குருவரெட்டியூர் அருகேயுள்ள கரடிப்பட்டியூர், முரளி, ஜர்த்தல் பெரிய ஏரிகள் மற்றும் சிறிய ஏரி, தண்ணீர் செல்லும் வழித்தடங்களில் உள்ள குளம், குட்டை, நீரோடைகளில் ஆண்டு முழுவதும் தண்ணீரை நிரப்புவதற்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

இதனை செயல்படுத்தினால் அருகிலுள்ள நீர்நிலைகள் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் உயரும். பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 Dec 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...