/* */

பர்கூர்: கால் சறுக்கி பள்ளத்தில் உருண்டு விழுந்து யானை பலி

பர்கூர் மலைப்பகுதியில் கால் சறுக்கி பள்ளத்தில் உருண்டு விழுந்து யானை பரிதாபமாக இறந்தது

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில், கோவில்நத்தம் ஓங்கேபள்ளம் சராகம் என்ற இடத்தில், மலை சரிவில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக பர்கூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு மாவட்ட வன அதிகாரி கவுதம் உத்தரவின்பேரில் உதவி வனப்பாதுகாவலர் (பயிற்சி) சவுமியா தலைமையில் வனத்துறையினர் கால்நடை டாக்டருடன் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

கால்நடை டாக்டர், யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். அதன்பின்னர் அவர் கூறும்போது, இறந்து கிடந்தது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்றும், வயது முதிர்வின் காரணமாக நடக்க சிரமப்பட்டுள்ள இந்த யானை, மலைப்பள்ளத்தில் கால் சறுக்கி உருண்டு விழுந்து இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். அதன் பின்னர் மற்ற விலங்குகளுக்கு உணவாக யானையின் உடல் அதே இடத்தில் விடப்பட்டது.

Updated On: 13 Oct 2021 8:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!