/* */

பள்ளிச்சிறுமியை கடத்தி கட்டாயத் திருமணம்: தாய் - மகன் கைது

அம்மாபேட்டை அருகே பள்ளிச்சிறுமியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்த வழக்கில் மணமகன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் 10 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி. இவர் கடந்த 6 ஆம் தேதி, கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த இந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்து கிடைக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாக அம்மாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.

இந்நிலையில் தனது பெற்றோருக்கு போன் செய்த அந்த சிறுமி, சேலம் மாவட்டம், எடப்பாடி ஆலச்சம்பாளையம், காட்டூரை சேர்ந்த, பூபதி, 24 என்பவர் ஆசைவார்த்தைக்கூறி தன்னை கட்டாய திருமணம் செய்து கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில், எடப்பாடியில் உள்ள பூபதி வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும் சிறுமியிடம் ஆசை வார்த்தைக்கூறி கடத்தி கட்டாய திருமணம் செய்த குற்றத்திற்காக பூபதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ததோடு, பூபதியின் அம்மா சண்முகவள்ளியை குழந்தை திருமணம் தடை சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Jun 2021 1:31 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  2. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  3. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  4. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  5. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  6. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  7. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  8. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!
  9. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    விவசாயத்தின் வேதனை – விளைநிலங்கள் விற்பனைக்கு !