திமுக அரசை தட்டி எழுப்பத்தான் அதிமுக ஆர்ப்பாட்டம்: கே.ஏ.செங்கோட்டையன்

திமுக அரசை தட்டி எழுப்பத்தான் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திமுக அரசை தட்டி எழுப்பத்தான் அதிமுக ஆர்ப்பாட்டம்: கே.ஏ.செங்கோட்டையன்
X

கோபியில் நடைபெற்ற அதிமுகவினரின் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்கும். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் 39 எம்பி தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

அதிமுக தலைமை முடிவின்படி கோபி நகரத்தில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:

கடந்த அதிமுக ஆட்சி தமிழகத்தில் பல்வேறு நல்லாட்சி தந்தது. பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மேட்டுப்பாளையம் - சத்தி விரிவாக்க சாலை பணி நடைபெறுகிறது. விரைவில், கோபி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதனால் பல்வேறு சிறப்பு பிரிவுகள் மருத்துவமனையில் உருவாகும். அதிக டாக்டர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். கோபி புறவழிச் சாலைக்காக அதிமுக ஆட்சியில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. சாலை அமைக்க ரூபாய் 19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அடைந்துள்ளது. கள்ளச்சாராய சாவுகள் நிகழ்கின்றன. பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகரிக்கின்றன. விடியா திமுக அரசை தட்டி எழுப்பத்தான் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிகிறது. விரைவில் திமுக ஆட்சியும் முடிவுக்கு வரும் என்றார்.

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி முன்னாள் எம்பி சத்யபாமா, முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.ரமணிதரன், ஏ.டி.சரஸ்வதி, மாவட்ட பொருளாளர் கே.கே.கந்தவேல் முருகன், கோபி ஊராட்சி ஒன்றிய தலைவர் மௌனீஸ்வரன், கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கதலைவர் வக்கீல் முத்துசாமி, மாணவரணி செயலாளர் அருள் ராமச்சந்திரன், கோபி சட்டமன்ற தொகுதி ஒன்றிய செயலாளர்கள் குறிஞ்சிநாதன், வக்கீல் வேலுமணி, பி.வி.சீனிவாசன், தம்பி (எ) சுப்பிரமணியம், சென்னை மணி (எ) ஈஸ்வரமூர்த்தி, கோபி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்து ரமணன், நகர பேரவை செயலாளர் விஜயகுமார், கோபி நகர இளைஞர் அணி செயலாளர் விஸ்வநாதன், கோபி நகர செயலாளர் பிரியோனி கணேஷ், மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Updated On: 29 May 2023 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா