பவானி அருகே அறிவுரை கூறிய தந்தையை கட்டையால் தாக்கிய பாசக்கார மகன் கைது

பவானி அடுத்த அம்மாபேட்டை அறிவுரை கூறிய தந்தையை கட்டையால் தாக்கிய வாலிபரை அம்மாபேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பவானி அருகே அறிவுரை கூறிய தந்தையை கட்டையால் தாக்கிய பாசக்கார மகன் கைது
X

தினேஷ்குமார்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள ஆனந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் இவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.இவரது மகன் தினேஷ்குமார் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி ஊரை சுற்றி கொண்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

மேலும் அடிக்கடி தாய் மற்றும் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தினேஷ்குமாருக்கு போதை அதிகமாகவே அவரது அம்மாவை தகாத வார்த்தைகள் பேசி தாக்கியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த தமுனுசாமி தினேஷை வன்மையாக கண்டித்துள்ளார்.

அப்போது போதையில் இருந்த தினேஷ்குமார் அருகிலிருந்த கட்டையால் முனுசாமியை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முனுசாமி அங்கிருந்து தப்பி ஓடி பவானியில் உள்ள தனியார் மருத்துவ சிகிச்சைக்காக சேர்ந்தார். இந்நிலையில் முனுசாமி அளித்த புகாரின் பேரில் மகன் தினேஷ்குமாரை பிடித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 22 Jun 2022 10:15 AM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
 2. வந்தவாசி
  வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
 3. உலகம்
  பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!
 4. ஆரணி
  கண்ணமங்கலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
 5. நாமக்கல்
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் விஜய் மக்கள் இயக்கத்தினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
 7. ஈரோடு
  அந்தியூர் காவல்துறையினரின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
 8. தமிழ்நாடு
  திருவண்ணாமலை நித்யானந்தா ஆசிரம பாதாள அறையில் இளம் பெண் அடைப்பு?
 9. குமாரபாளையம்
  அக்னிபத் திட்டம் கைவிட கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
 10. குமாரபாளையம்
  பூட்டி கிடந்த படிப்பகம் திறக்க குமாரபாளையம் நகராட்சி சேர்மன்...