4,318 பணியிடம் நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

Vacancy 2022- மருத்துவ துறையில் 4,318 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
Vacancy 2022 | Erode District
X

தாளவாடி வட்டாரத்தில் ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்க விழாவினை  அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்

Vacancy 2022- ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டாரத்தில் ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்க விழாவினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். அதன்பின், தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழு நோயாளி களை கண்டறியும் முகாம் மற்றும் உபகரணங்கள். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்ரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கருமுட்டை தானம் என்பது சட்டப்பூர்வமான ஒன்று. 21 முதல் 35 வயது வரை உள்ள பெண்கள் கருமுட்டை தானம் கொடுக்கலாம். ஈரோட்டில் 16 வயது சிறுமி சிறுமி கருமுட்டை தானம் கொடுக்கப்பட்டது கண்டறியப்பட்டு தமிழகத்தில் உள்ள நான்கு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஆந்திரா மற்றும் கேரளாவில் உள்ள மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள செயற்கை கருத்தரித்தல் மருத்துவமனைகளுக்கு கருமுட்டை தானம் சம்பந்தமாக விரிவான வரன் முறை அறிக்கை தயார் செய்யப்பட்டு அனுப்பப் பட உள்ளது. மருத்துவத் துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படாத செயற்கை கருத்தரித்தல் மையங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் அந்த அறிக்கையில் தகவல்கள் இடம்பெறும்.

தமிழகத்தில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரத்துறையில் 4318 புதிய பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பி.எஸ்.சி. ரேடியாலஜி படித்த பட்டதாரிகளுக்கு ரேடியோகிராபர் பணி வழங்குவது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 July 2022 10:06 AM GMT

Related News