/* */

ஈரோட்டில் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 91 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில், சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 91 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 91 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
X

Erode news, Erode news today- விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை (பைல் படம்).

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில், சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 91 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின் பேரிலும், கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி அறிவுரையின்படியும், ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஈரோடு மாவட்டத்தில் தேசிய விடுமுறை தினமான (சுதந்திர தின விழா) நேற்று கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

117 நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில், கடைகள் மற்றும் நிறுவனங்களில் 37 விதிமீறல்களும், உணவு நிறுவனங்களில் 50 விதிமீறல்களும் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 4 விதிமீறல்களும் என்று மொத்தம் 91 நிறுவனங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. அந்த நிறுவனங்களின் மீது இணக்க கட்டண அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தகவலை, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Aug 2023 7:53 AM GMT

Related News