அந்தியூரில் வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த நபரை, போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அந்தியூரில் வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது
X

Erode news, Erode news today- கைது செய்யப்பட்ட சீனிவாசன்.

Erode news, Erode news today- அந்தியூரில் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி, தொழிலாளியிடம் பணம் வாங்கி ஏமாற்றிய நபரை, போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த அப்பு ஆறுமுகம் என்பவர், பழுதடைந்த வீட்டை சரி செய்ய வங்கியில் கடன் வாங்கி தருகிறேன் எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பு ஆறுமுகம் தனது நண்பர் எனக்கூறி, ஒலகடம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரை, வங்கியில் கடன் பெற்று தரும் ஏஜெண்டாக பணிபுரிந்து வருவதாக அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, வங்கியில் கடன் பெற தனக்கு 31 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என, சீனிவாசன் கூறியதையடுத்து முருகன் சீனிவாசனிடம் 31,000 ரூபாய் கொடுத்துள்ளார்.

பின்னர், கடன் பெற்றுத் தர காலதாமதம் செய்து வந்ததைத் தொடர்ந்து, அவரிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு இருவரும் மறுக்கவே, சீனிவாசன் மற்றும் அப்பு ஆறுமுகம் மீது அந்தியூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி, ஆறுமுகத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தார். இதில் தலைமறைவாய் இருந்து வந்த சீனிவாசனை நேற்று கைது செய்து பவானி நீதிமன்றத்தில், ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும், போலீசார் வேறு யாரிடமாவது அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 2023-02-01T13:23:18+05:30

Related News

Latest News

 1. கரூர்
  கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; மக்கள் அவதி
 2. கல்வி
  employment training workshop-JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும்...
 3. கரூர்
  பள்ளிக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்துக்கு ரூ. 1 கோடி...
 4. தூத்துக்குடி
  அண்ணன் பாணியில் தங்கை: சாலையோர கடையில் தேநீர் அருந்தினார் கனிமொழி...
 5. கரூர்
  கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
 6. லைஃப்ஸ்டைல்
  வாழை இலையில ரசம் செஞ்சு இருக்கீங்களா...... அட அட ஊரே மணக்கும்
 7. கல்வி
  students conference -JKKN பொறியியல் கல்லூரியில் மாணவர் தலைமையிலான...
 8. பேராவூரணி
  பேராவூரணி அருகே கடை வைத்து 5 ரூபாய்க்கு தேனீர் விற்கும் முன்னாள்...
 9. சினிமா
  வந்தியத்தேவனாக கமல், குந்தவையாக ஸ்ரீதேவி - முன்னாள் முதல்வரின் ஆசை
 10. லைஃப்ஸ்டைல்
  143 meaning in tamil-143 என்பது எதை குறிக்கிறது..? இளைஞர்களின் கனவு...