/* */

மக்காச்சோளம் ஏற்றிக் கொண்டு வந்த லாரி மலைப் பாதையில் மோதி விபத்து

கர்நாடகாவில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு மக்காச்சோளம் ஏற்றி வந்த லாரி அந்தியூர் பர்கூர் மலைப்பாதையில் மோதி விபத்துக்குள்ளானது.

HIGHLIGHTS

மக்காச்சோளம் ஏற்றிக் கொண்டு வந்த லாரி மலைப் பாதையில் மோதி விபத்து
X

மலைப்பாதையில் விபத்துக்குள்ளான லாரி. சாலையில் சிதறி கிடந்த சோளம் மூட்டைகள்.

கர்நாடகா மாநிலத்தில் இருந்து நாமக்கல்லிற்கு மக்காச்சோளம் ஏற்றிக்கொண்டு வந்த லாரி அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் மோதி விபத்துக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை அமைந்து உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலத்துக்கு செல்லக்கூடிய சாலை உள்ளது. இதனால், தினமும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஏராளமான கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் வந்து செல்கிறது. இந்த நிலையில், சத்தியமங்கலம் திம்பம் வனப்பகுதி ரோட்டில் அடிக்கடி வாகனங்கள் பழுதாகி நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மாற்று பாதையாக அந்தியூர், பர்கூர் மலைப்பாதை வழியாக பல கனரக வாகனங்கள் மைசூருக்கு சென்று வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் ராமபுரத்தில் இருந்து மக்காச்சோளம் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டத்துக்கு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை திருப்பூர் மாவட்டம் பெரிய பொம்மன்நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். லாரியானது, அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி இரண்டாவது வளைவில் வந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த மக்காச்சோள மூட்டைகள் சாலையில் சரிந்தன. விபத்தில், டிரைவர் பழனிச்சாமி காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து வாகன போக்குவரத்து தொடங்கியது. இந்த சம்பவம் காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 8 Feb 2023 7:37 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!