/* */

பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை திடீர் உயிரிழப்பு

Erode news today - அந்தியூர் அருகே பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை திடீர் உயிரிழப்பு
X

பைல் படம்.

Erode news today - ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே அம்மாபேட்டை அடுத்த பூனாச்சி, நத்தமேட்டில் வசித்து வருபவர் பிரபு. இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன் சகுந்தலா (21) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இவர்களுக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான சகுந்தலாவுக்கு கடந்த 18-ம் தேதி ஒலகடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.

சகுந்தலாவிற்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததால், 3 நாட்களுக்குப் பின் அவர் வீடு திரும்பினார். பிறந்த குழந்தைக்கு கடந்த 26-ம் தேதி தடுப்பூசியும், அம்மை ஊசியும் ஒலகடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு தாய் சகுந்தலா பால் கொடுத்துவிட்டு துணி துவைத்துக் கொண்டிருந்துள்ளார்.

அவர் மீண்டும் குழந்தையை பார்த்தபோது, எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருந்ததுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சகுந்தலா தனது கணவர் பிரபுவுக்கும், கணவரின் அக்கா சுமதிக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, உடனடியாக ஒலகடம் அரசு சுகாதார நிலையத்திற்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்துஅம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

குழந்தையை பெருந்துறை மருத்துவகல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வந்தபின்னரே உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Updated On: 29 April 2023 7:52 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?