கோபிசெட்டிபாளையம் அருகே காணாமல் போன 5 செல்போன் கோபுரங்கள் : வலைவீசி தேடும் போலீசார்

Crime News Tamil -வடிவேலுவின் கிணற்றை காணும் என்ற காமெடிபோல் செல்போன் டவரை காணவில்லை என தனியார் நிறுவன பொறியாளர் புகார் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோபிசெட்டிபாளையம் அருகே காணாமல் போன 5 செல்போன் கோபுரங்கள் : வலைவீசி தேடும் போலீசார்
X

பைல் படம்

Crime News Tamil -சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோசலகுமார் (வயது 49). தனியார் நிறுவன பிராஜெக்ட் என்ஜினீயர். இந்த நிலையில் இந்த தனியார் நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை, தண்ணீர்பந்தல்புதூர், நல்லகவுண்டன்பாளையம், கள்ளிப்பட்டி பிரிவு மற்றும் மொடச்சூர் ராஜன்நகர் ஆகிய 5 இடங்களில் ஏர்செல் செல்போன் நிறுவனம் அமைந்திருந்த செல்போன் கோபுரம் மற்றும் கட்டுப்பாட்டு அறையை சுமார் ரூ.1.30 கோடிக்கு விலைக்கு வாங்கி உள்ளது. இவை அனைத்தும் கடந்த 2017-ம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்த நிலையில் அதன் பின்னர் இயங்கவில்லை.

இதனையடுத்து, தனியார் நிறுவனத்தின் பிராஜெக்ட் என்ஜினீயர் கோபி பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்கள் இயங்காமல் போனது குறித்து ஆய்வு செய்தார். அப்போது 5 இடங்களில் பொருத்தப்பட்டு இருந்த டவர்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர் காணாமல் போன செல்போன் கோபுரங்களை கண்டு்பிடித்து தருமாறு கோபியில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-ல் வழக்கு தொடர்ந்தார். பின்னர், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன 5 செல்போன் கோபுரங்களை தேடி வருகின்றனர்.

இது புதுசா..இருக்கே..!!??

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-06-23T15:00:17+05:30

Related News

Latest News

 1. விழுப்புரம்
  பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
 2. திருமங்கலம்
  கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு
 3. தமிழ்நாடு
  வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு
 4. இலால்குடி
  திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் போராட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
 6. வந்தவாசி
  வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
 7. உலகம்
  பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!
 8. ஆரணி
  கண்ணமங்கலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
 9. நாமக்கல்
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வங்கள் இடமாற்றம்