/* */

ஈரோடு கிழக்கு தேர்தல்: ஸ்டாலின் உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்யும் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. வழங்கி உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு கிழக்கு தேர்தல்: ஸ்டாலின் உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியல்
X

பைல் படம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக தி.மு.க. அமைச்சர்கள், தி.மு.க. முன்னணியினர், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் .இளங்கோவனை ஆதரித்து தி.மு.க.வில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் பட்டியலை தி.மு.க. தலைமை கழகம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளது.

அந்த நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் தமிழ்நாடு முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இடம் பெற்றுள்ளார். மேலும் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.‌

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எ.வேலு, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முத்துசாமி, பெரியகருப்பன், சக்கரபாணி, செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரன், பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, ஆவடி நாசர் , ரகுபதி , சாமிநாதன், சிவசங்கர், கீதா ஜீவன், அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, , ராஜா கண்ணப்பன், காந்தி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மூர்த்தி, மெய்யநாதன் , கணேசன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம், அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. நந்தகுமார், சென்னை மாவட்ட மேற்கு கழக செயலாளர் சிற்றரசு, திருப்பூர் செல்வராஜ் உள்ளிட்ட 40 பேர் அதில் இடம் பெற்றுள்ளனர்.

Updated On: 7 Feb 2023 7:32 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...