அந்தியூரில் கர்நாடகா மாநில மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த 4 பேர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கர்நாடகா மாநில மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அந்தியூரில் கர்நாடகா மாநில மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த 4 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட 4 பேரை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் - பர்கூர் சாலையில் கிருஷ்ணாபுரம் ஏரிக்கரையில் அந்தியூர் போலீசார் இன்று (மார்ச்.18) சனிக்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வந்த இருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில் அவர்களிடம் 19 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பிரபு (26), பள்ளிபாளையம் தெற்குபாளையத்தை சேர்ந்த சந்துரு (22) ஆகியோர் என்பதும், வெளிமாவட்டத்தில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து இங்கு அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 19 கர்நாடக மாநில மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடம் இருந்து போலீசார் 24 கர்நாடக மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் லட்சுமி நகரை சேர்ந்த முகமது முஸ்தபா (வயது 23) , பள்ளிபாளையம் வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி (32) என்பதும், இவர்கள் 2 பேரும் கர்நாடக மாநிலம் மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேரையும் அந்தியூர் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அந்தியூர் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் 43 கர்நாடக மாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 March 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. விழுப்புரம்
    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட 2 பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்: பயன்படுத்தும் முறை
  3. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  6. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  7. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  8. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  9. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  10. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்