/* */

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 30 போலீசாருக்கு கொரோனா.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இதுவரை 30 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர்

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 30 போலீசாருக்கு கொரோனா.
X

காவல்துறையினருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.இதனையடுத்து, மாவட்டத்தில் மீண்டும் போலீசாருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது.

நேற்று முன்தினம் வரை, சூரம்பட்டி பெண் ஆய்வாளர், வீரப்பன்சத்திரம் ஆய்வாளர், கடம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் ஒருவர், பெருந்துறை காவல் நிலையத்தில் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர்உதவி ஆய்வாளர், முதல்நிலை காவலர், பெருந்துறை டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரியும் தலைமை காவலர் என மொத்தம் 19 காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், தாளவாடி காவல் நிலையத்தில் காவலர் ஒருவருக்கும், அந்தியூர் காவல் நிலையத்தில் காவலர் ஒருவருக்கும் என நேற்று வரை மாவட்டத்தில் 30 போலீசாருக்கு சளி, இருமல் தொந்தரவு காரணமாக பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி 2-ம் தவணை தடுப்பூசியினை செலுத்திக்கொண்டு உள்ளதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

பின்னர், தடுப்பு நடவடிக்கையாக அனைத்து காவல் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலருடன் தொடர்பில் இருந்த மற்ற போலீசாரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 20 Jan 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?