/* */

தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 25 வழக்குகள்: ஈரோடு எஸ்.பி. சசிமோகன் தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதியில், தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக, 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. சசிமோகன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 25 வழக்குகள்: ஈரோடு எஸ்.பி. சசிமோகன் தகவல்
X

ஈரோடு எஸ்.பி சசிமோகன் (பைல் படம்).

ஈரோடு கிழக்கு தொகுதியில், தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக, 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் குறித்து அனைத்துக் கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பின் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:- இடைத்தேர்தலையொட்டி அமலுக்கு வந்துள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து, அரசியல் கட்சி சந்தேகங்களுக்கு பிரமுகர்களின் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப் பட்டால் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்ட பின்பு அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதுவரை பறக்கும் படை மூலம் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. இடைத்தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா உள்ளிட்டோர் இருந்தனர்.

ஈரோடு எஸ்.பி. சசிமோகன் கூறியதாவது:-

காவல்துறை நிர்ணயம் செய்துள்ள இடங்களில், உரிய அனுமதி பெற்று அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும். ஊர்வலங்கள் கட்சிக்கொடிகளை செல்லவும் உரிய அனுமதி பெற வேண்டும். கட்சிக்கொடிகளை அகற்றாமல் இருப்பது உள்ளிட்ட தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக இதுவரை 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 24 Jan 2023 2:25 PM GMT

Related News