Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்
ஈரோடு மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில், இதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது மாவட்டம் முழுவதும் 20 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளன.இந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதேபோல் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
முக கவசம் , தனிமனித இடைவெளியேயும், பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளனர்