/* */

108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்: ஈரோட்டில் 28-ல் நேர்காணல்

தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் 28-ம் தேதி நடக்கிறது.

HIGHLIGHTS

108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்: ஈரோட்டில் 28-ல் நேர்காணல்
X

108 ஆம்புலன்ஸ் (பைல் படம்).

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலை வாய்ப்பு முகாம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள், அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஈரோடு அரசு தலைமை அரசு மருத்துவமனை உள்ள டிபி-ஹாலில் வரும் 28-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

108 சேவையில் மருத்துவ உதவியாளர் பணிக்கான கல்வித்தகுதி: B.Sc. நர்சிங், அல்லது GNM, ANM, DMLT (12 ஆம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். அல்லது Life Science Graduates (B.Sc. Zoology. Botany, BioChemistry.Microbiology, Biotechnology, Plant Biology) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்: ரூ.15,435/- (மொத்த ஊதியம்)

வயது: நேர்முக தேர்வு அன்று 19 வயதுக்கு மேலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

தேர்வு முறை: 1. எழுத்துத் தேர்வு 2.மருத்துவ நேர்முகம்-உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை 3. மனிதவளத் துறையின் நேர்முகம்.

108 சேவையில் டிரைவருக்கான அடிப்படை தகுதிகள்:

கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி ,

மாத ஊதியம்: ரூ.15,235/- (மொத்த ஊதியம்) ,

வயது: நேர்முக தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

உயரம்: 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்

தகுதி: இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை :1. எழுத்துத் தேர்வு 2. தொழில்நுட்பத் தேர்வு 3. மனிதவள துறை நேர்காணல் 4.கண்பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு 5. TEST DRIVE.

நேர்முகத் தேர்வு:-

நேர்முக தேர்வுக்கு கலந்துகொள்ளும் அனைவரும் அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக கொண்டு வர வேண்டும். மேலும் விவரம் அறிய கீழ்காணும் தொலைபேசி எண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளவும் : 7338894971,91540084152, 7397724829, 7397724813,7397724858.

Updated On: 25 Jan 2023 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  2. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  6. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  7. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  8. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  9. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  10. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!