/* */

மேட்டூர், பவானிசாகர் அணைகளின் இன்றைய (மார்ச் 26) நீர்மட்ட நிலவரம்

Erode news, Erode news today- மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

HIGHLIGHTS

மேட்டூர், பவானிசாகர் அணைகளின் இன்றைய (மார்ச் 26) நீர்மட்ட நிலவரம்
X

Erode news, Erode news today- மேட்டூர் அணை (பைல் படம்).

Erode news, Erode news today- தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகளான மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளின் இன்றைய (மார்ச்.26) நீர்மட்ட நிலவரங்களை காணலாம். அணையின் நீர் வரத்து, அணைகளின் நீர் இருப்பு, அணைகளின் நீர் வெளியேற்றம் என அனைத்து விபரங்களும் அறியலாம்.

மேட்டூர் அணையின் நீர்மட்ட நிலவரம்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. இன்று (மார்ச்.26) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1,248 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று 103.07 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 103.03 அடியாக சரிந்தது.

பவானிசாகர் அணையின் நீர்மட்ட நிலவரம்

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இன்று (மார்ச்.26) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.06 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 822 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 26 March 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  6. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  7. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  8. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  9. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!