/* */

ஈரோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் காலமானார்

ஈரோடு காங்கிரஸ் எம்.எல்.ஏவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் காலமானார்

HIGHLIGHTS

ஈரோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ  திருமகன் காலமானார்
X

ஈரோடு எம்எல்ஏ திருமகன்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன்(46) ஈ.வெ.ரா காலமானார். இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் ஆவார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாரடைப்பால் காலமானார்.

தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவனின் மகனான திருமகன் ஈவெரா, தமிழக காங்கிரஸ் மாநில பொது செயலாளராக இருந்தார். கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பி.ஏ., பொருளாதாரம் படித்துள்ள இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

இவர் இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடந்த, 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வை சேர்ந்த .யுவராஜாவை 8,523 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். இவர் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக உள்ளார். இதற்கு முன்பு 2015ம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் தலைவராக இருந்துள்ளார்.

இவரது மறைவு செய்தியை கேட்டு கிழக்கு தொகுதி மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Updated On: 6 Jan 2023 7:04 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!