/* */

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 14-வது புதிய பேராயர் தேர்வு

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 14-வது புதிய பேராயராக கிறிஸ்டியன் சாம்ராஜ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

HIGHLIGHTS

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 14-வது புதிய பேராயர் தேர்வு
X

புதிய பேராயராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிறிஸ்டியன் சாம்ராஜுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு டி. இ. எல். சி. எனப்படும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை இயங்கி வருகிறது. இந்த திருச்சபையின் 14 வது பேராயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திருச்சியில் இன்று தரங்கை வாசம் தூய கிறித்துவ பேராலயத்தில் நடைபெற்றது. பரிசுத்த திருவிருந்து ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஆணையின்படி நியமிக்கப்பட்ட நிர்வாகஸ்தர் ஓய்வு பெற்ற ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் என். பால் வசந்தகுமார் மற்றும் தேர்தல் அதிகாரி என். ரத்தினராஜ் (ஓய்வு பெற்ற முதன்மை மாவட்ட நீதிபதி), நிதி மற்றும் சொத்து அதிகாரி ஜி. ஜெயச்சந்திரன் (ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர்) ஆகியோர் முன்னிலையில் இந்த தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சிறப்பு சினோடு உறுப்பினர்கள் 419 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

இதில் மறைதிரு டாக்டர் ஏ. கிறிஸ்டியன் சாம்ராஜ் 14 -வது புதிய பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் பீளமேடு குருசேகர சபை குரு ஆவார். தேர்தலில் அவர் 398 வாக்குகள் பெற்றிருந்தால் 14வது புதிய பேராயராக தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவருக்கு வருகிற 14-1-2023 அன்று தரங்கம்பாடி புது ஜெருசலேம் ஆலயத்தில் பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது வெற்றி பெற்ற புதிய பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜிற்கு சபை மக்களும் தலைவர்களும் சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்கள்.

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சார்பில் திருச்சி மற்றும் தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை இந்த திருச்சபை சார்பில் நடத்தப்படும் ஒரு நிறுவனம் ஆகும். இங்கு ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி இலவச கண் அறுவை சிகிச்சைகளும், பல்வேறு சலுகைகளுடன் கூடிய சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Updated On: 7 Dec 2022 2:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!