/* */

கல்விக்கு மீண்டும் முதலிடம் தந்த தமிழ்நாடு முதல்வருக்கு கல்வியாளர்கள் சங்கமம் நன்றி

நிதிநிலை அறிக்கையில்பள்ளி கல்விக்கென 40,229 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட 4,229 கோடி ரூபாய் கூடுதல்

HIGHLIGHTS

கல்விக்கு மீண்டும் முதலிடம் தந்த தமிழ்நாடு முதல்வருக்கு கல்வியாளர்கள் சங்கமம் நன்றி
X

 கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் நிறுவனர் சதிஷ்குமார்

கல்விக்கு மீண்டும் முதலிடம் தந்த தமிழ்நாடு முதல்வருக்கு கல்வியாளர்கள் சங்கமம் நன்றி பாராட்டியுள்ளது.

தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து, கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் நிறுவனர் சதிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு அரசின் 2023 – 24 -ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் அவர்கள் திங்கள்கிழமை(20.3.2023) தாக்கல் செய்தார்.இந்த நிதிநிலை அறிக்கையில்,பள்ளி கல்விக்கென ரூ. 40,229 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வியில் மாணவர்கள் நலன் சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வரும் தமிழ்நாடு அரசு, சென்ற ஆண்டு நிதி ஒதுக்கீட்டை விட இந்த ஆண்டிற்கு 4,229 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது.

பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்குவதைஉறுதி செய்திடவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத் துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் பள்ளி கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு கல்வித் துறை வரலாற்றில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 110 கோடி ரூபாய் செலவில் எண்ணும் எழுத்தும் திட்டம் நான்காம் ஐந்தாம் வகுப்பு களுக்கும் விரிவு படுத்தப்படுகிறது.

மாணவர்கள் கல்வி மற்றும் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் தமிழ்நாடு அரசு அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்தவும், மேம்படுத்தவும் ஆண்டு தோறும் கூடுதல் நிதியை ஒதுக்கி வருவது தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் மீது தமிழ்நாடு முதல்வரின் தனிப்பட்ட பார்வையை காட்டுகிறது.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் காலைநேரச் சிற்றுண்டிக்கென 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கூடுதலாக 18 லட்சம் மாணவர்களை இணைத்து மாணவர்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்தியுள்ளது அரசு.

பள்ளிக் கல்வித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி கல்விப் பணியை காத்து நிற்கும் தமிழ்நாடு முதல்வருக்கும், நிதி அமைச்சருக்கும், பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கும் கல்வியாளர்கள் சங்கமம் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.ஒவ்வொரு துறையிலும் அமல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்த நிதியமைச்சர், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.

துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:

தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு.தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு.காவல் துறைக்கு ரூ.8,930 கோடி.தீயணைப்புத் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.நீதித் துறைக்கு ரூ.1,713 கோடி ஒதுக்கீடு.மீன்வளத் துறைக்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு.குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு.

நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு.மின்சாரத்துறைக்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு.பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு.உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369 கோடி ஒதுக்கீடு.மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18,933 கோடி ஒதுக்கீடு.சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ஒட்டு மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.4,142 கோடியாக உயர்வு.பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்துவதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு. விளையாட்டு மேம்பாட்டிற்கு ரூ.225 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Updated On: 21 March 2023 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  5. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  10. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?