/* */

கேரளாவில் 50 சதவீத பஸ்கள் நிறுத்தம்

Today Bus Strike News In Tamil- டீசல் தட்டுப்பாட்டால், கேரள அரசு போக்குவரத்தில் 50 சதவீத பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கேரளாவில் 50 சதவீத பஸ்கள் நிறுத்தம்
X

கேரளாவில் 50 சதவீதம் மட்டுமே, அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Today Bus Strike News In Tamil- கேரள அரசு போக்குவரத்து பஸ்கள், கேரளம் மற்றும் பிற மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது. போக்குவரத்து கழகத்தின் சராசரி தினசரி வருவாய் ரூ.6.5 கோடியாக உள்ளது. இதில் டீசல் செலவு மட்டும் ரூ.3.5 கோடியாக உள்ளது. தொகையை, எண்ணெய் நிறுவனங்களுக்கு போக்குவரத்து கழகம் வழங்கினாலும், கட்டண பாக்கி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், கேரள அரசுபோக்குவரத்து கழகம், எண்ணெய் நிறுவனங்களுக்கு தர வேண்டிய கட்டண பாக்கி ரூ.135 கோடியாக உள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் டீசல் வழங்குவதை நிறுத்தி விட்டன.

எனவே போக்குவரத்துக் கழகம் தற்போது, ​​தினமும் பணம் செலுத்தி, டீசல் கொள்முதல் செய்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.) நிலுவையில் உள்ள ரூ.123 கோடி மற்றும் வட்டி உட்பட முந்தைய பாக்கியான ரூ.139 கோடியை தீர்க்காமல், டீசல் வழங்க மறுத்துவிட்டது. இதனால், கேரள அரசு போக்குவரத்து கழகம் தனது சேவைகளை குறைத்துள்ளது.

டீசல் தட்டுப்பாடு காரணமாக, கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தில் நீண்ட தூர பயண சேவை மற்றும் மாநிலத்தில் 50 சதவீத பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில், பல பகுதிகளில் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். கனமழை காரணமாக பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக, அம்மாநில போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 7:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...