/* */

இரட்டை பாதை பணியால் மதுரை மார்க்கத்தில் ரயில் சேவை இன்று முதல் மாற்றம்

இரட்டைப்பாதை பணியால் மதுரை மார்க்கத்தில் சில ரயில்களின் சேவையில் இன்று முதல் 3 நாள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

இரட்டை பாதை பணியால் மதுரை மார்க்கத்தில் ரயில் சேவை இன்று முதல் மாற்றம்
X

ரயில் (கோப்பு படம்)

இரட்டை ரயில் பாதை பணி காரணமாக மதுரை மார்க்கத்தில் செல்லும் ரயில்களின் சேவையில் 3 நாட்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மதுரை மற்றும் விருதுநகரில் இரட்டை ரயில்வே பாதை இணைப்பு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதையொட்டி இன்று (6-ந் தேதி) முதல் 8-ந் தேதி வரை சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

2 ரயில்கள் ரத்து

அதன்படி திருச்செந்தூர்-பாலக்காடு, மதுரை-ராமேசுவரம் ரயில்கள் இரு மார்க்கங்களிலும் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்று மட்டும் திண்டுக்கல் வரை இயக்கப்படும். திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் நாளை ( 7-ந் தேதி) கூடல் நகர் வரை மட்டும் செல்லும். மதுரை-திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் 6,7,8-ந் தேதிகளில் கூடல் நகரில் இருந்து இயக்கப்படும்.

கோவை எக்ஸ்பிரஸ்

நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் இரு மார்க்கங்களிலும் விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும். மதுரை-செங்கோட்டை முன்பதிவற்ற பயணிகள் ரெயில், இரு மார்க்கங்களிலும் விருதுநகர் வரை மட்டும் செல்லும். விழுப்புரம்-மதுரை ரெயில் இரு மார்க்கங்களிலும் திண்டுக்கல் வரை மட்டும் செல்லும். மதுரை-கோவை ரெயில் இரு மார்க்கங்களிலும் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்.

புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் இரு மார்க்கங்களிலும் 7-ந் தேதி நெல்லை வரை மட்டும் இயக்கப்படும்.

குருவாயூர் எக்ஸ்பிரஸ்

குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்றும், நாளையும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரெயில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டையில் நின்று செல்லும்.

மும்பை எக்ஸ்பிரஸ்

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் 8-ந் தேதி வரை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக செல்லும். இந்த ரெயில் மானாமதுரையில் மட்டும் நின்று செல்லும்.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்

கன்னியாகுமரி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் இரு மார்க்கங்களிலும் நாளை (7-ந் தேதி) விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாக செல்லும். ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இன்று (6-ந் தேதி) மற்றும் 8-ந் தேதி மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செல்லும்.

தேனியில் இருந்து மதுரை வரும் பயணிகள் சிறப்பு ரெயில், 30 நிமிடம் தாமதமாக மாலை 6.45 மணிக்கு வரும். திருச்சி பயணிகள் ரெயில், 30 நிமிடம் தாமதமாக மானாமதுரைக்கு வரும்.

சென்னை மதுரை எக்ஸ்பிரஸ்

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-மதுரை(வண்டி எண்: 20601) இடையே இரவு 10.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் மற்றும் மதுரை இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மதுரை-எம்.ஜி.ஆர். சென்டிரல்(20602) இடையே இரவு 10.50 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை மற்றும் திண்டுக்கல் இடையே நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 7 Feb 2023 6:20 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?