/* */

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு பற்றி அமித்ஷா கூறியது என்ன தெரியுமா?

ADMK News Tamil - 'அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு பற்றி மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழக பா.ஜ.க.வினரிடம் கூறியது என்ன தெரியுமா என்பதை அறிய கீழே படியுங்கள்.

HIGHLIGHTS

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு பற்றி அமித்ஷா கூறியது என்ன தெரியுமா?
X

அமித்ஷா

ADMK News Tamil -"தமிழ்நாட்டு அரசியலில் எப்படியாவது வேர் பிடித்து விட வேண்டும் என்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தீவிரமாக விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் நினைப்பதை தமிழகத்தில் இருக்கும் எந்த பா.ஜ.க. தலைவரும் செய்யவில்லை என்பதுதான் அவர்களுக்கு இருக்கும் நீண்ட நாள் வருத்தம். இதை பல முறை அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழகம் தொடர்பான கட்சிக் கூட்டங்களில் தெரிவித்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிரதமர் மோடி கடந்த மாதம் சென்னை வந்து சென்றதற்குப் பிறகு தமிழ்நாட்டு விவகாரங்கள் மீது அமித் ஷா கடுமையான அதிருப்தியும் கோபமும் கொண்டிருப்பதாக பா.ஜ.க.வின் டெல்லி சோர்சுகள் தெரிவிக்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன என்று அறியும் முன் கடந்த ஜூலை 28 ஆம் தேதி பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா, அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றுக்காக வந்த சம்பவங்களை கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.

அப்போது ஜூலை 28 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவுக்குப் பிறகு ஆளுநர் மாளிகை சென்ற பிரதமர் மோடி அன்று இரவு தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள், புதிதாக பா.ஜ.க.வுக்கு வந்த பிரமுகர்கள் உள்ளிட்டோரை சந்தித்தார்.

ராஜ்பவன் தர்பார் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு நிகழ்ச்சிக்காக உள்ளே பிரதமர் சென்றதும் தனது ஆரம்ப கால ஆர்.எஸ்.எஸ்,. நண்பரான எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வை கட்டியணைத்துக் கொண்டார். அதன் பின் நிர்வாகிகளிடையே பேசிய மோடி, 'வட இந்தியாவில் நாம் செல்வாக்காக இருக்கிறோம். ஆனால் தென்னிந்தியாவில் நாம் பலவீனமாக இருக்கிறோம். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் 5 தாமரை எம்.பி.க்களை நாம் தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும். குறைந்த பட்சம் தான் 5 என்று சொல்கிறேன். அதிகபட்சம் அதையும் தாண்டி அனுப்பலாம். கட்சி நிர்வாகிகள் தங்களுக்குள் இருக்கும் சுய விருப்பு வெறுப்புகளை களைந்து விட்டு கட்சிக்காக உழையுங்கள்.

நமது பிரச்சினைகளை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். கட்சி வேலைகளை தீவிரமாக பாருங்கள். கூட்டணி உண்டா இல்லையா, யாரோடு கூட்டணி என்பதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். தாமரை சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை மட்டும் பாருங்கள்' என்று பேசினார் பிரதமர். பலர் தெரிவித்த கருத்துகள் இந்தியில் டைப் செய்யப்பட்டு பிரின்ட் எடுக்கப்பட்டு பிரதமரிடம் கொடுக்கப்பட்டன. அவற்றையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார் பிரதமர்.

பிரதமர் மோடி டெல்லி சென்ற சில தினங்களில் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது பற்றியும், தமிழக அரசியல் நிலவரம் எப்படி இருக்கிறது என்பது பற்றியும் ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் சர்வே நடத்தப்பட்டிருக்கிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும் இந்த சர்வே நடத்தப்பட்டிருப்பது தெரியும். இந்த சர்வே முடிவுகள் கடந்த வாரம் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகளோடு ஏற்கனவே மத்திய உளவுத்துறை மூலமும் சில தகவல்களை அமித் ஷா திரட்டி வைத்திருந்தார்.

பா.ஜ.க. பிரத்யேகமாக நடத்திய ஆய்வு முடிவுகளில், 'தமிழ்நாட்டில் இந்து ஒற்றுமை இந்து ஓட்டு வங்கி என்பதை வைத்து அரசியல் செய்ய முடியாது. மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் செய்த நலத்திட்டங்கள் தமிழக மக்களிடம் சென்றடையவே இல்லை. தமிழக பா.ஜ.க. தலைவர்கள் சர்ச்சைப் பேச்சுகளை அதிகம் பேசுகிறார்களே தவிர, மத்திய அரசின் நலத்திட்டங்கள் பற்றிய பாசிடிவ் ஆன பிரச்சாரமே இல்லை, அதுவும் அண்ணாமலையால் பரபரப்பு தான் ஏற்படுகிறதே தவிர ஓட்டு எதுவும் வருமா என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டில் 80% தொழில்கள் தி.மு.க, அ.தி.மு.க. காரர்கள் அல்லது அவர்களைச் சார்ந்தவர்களிடம் உள்ளன. எனவே பிற கட்சியினருக்கு இங்கே பொருளாதார ரீதியான ஆதரவு இல்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் தி.மு.க, அ.தி.மு.க .ஆட்சிகளின் நலத்திட்டங்களால் பயன் பெற்றிருக்கிறார்கள்' என்று போகும் அந்த ஆய்வறிக்கையில் இன்னும் முக்கியமான ஒரு புள்ளி விவரம் இடம்பெற்றிருக்கிறது.

'தமிழ்நாட்டில் ஒரு பூத்தில் ஆயிரம் ஓட்டுகள் என்றால் அதில் 300 ஓட்டுகள் தி.மு.க. ஓட்டுகளாக இருக்கின்றன. 225 முதல் 250 ஓட்டுகள் அதிமுக ஓட்டுகளாக இருக்கின்றன. பிற கட்சிகள் சேர்ந்து 100 ஓட்டுகள் இருக்கின்றன. பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் ஒரு பூத்துக்கு சராசரியாக பத்து ஓட்டுகள் மட்டுமே இருக்கின்றன. இதை அதிகப்படுத்தாமல் பா.ஜ.க.வால் தமிழகத்தில் எதுவும் செய்ய முடியாது' என்று அந்த ரிப்போர்ட் சொல்லியிருக்கிறது.

மேலும், 'மத்திய பா.ஜ.க. ஆட்சி எட்டு வருடங்களாக இருந்தபோதும் தமிழக பா.ஜ.க .நிர்வாகிகள் கட்சித் தொண்டர்களுக்கு, கட்சி கீழ் மட்ட நிர்வாகிகளுக்கு, தொண்டர்களுக்கு எந்த உதவியும் செய்திருக்கவில்லை. இதனால் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளும் செலவு செய்ய முடியாமல் திண்டாடி வருகிறார்கள்' என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வியூகமே பூத் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்பதுதான். ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க.வின் பூத் கட்டமைப்பு மிகவும் பலவீனமாகவே தொடர்ந்து இருக்கிறது என்பதை அறிந்து அமித் ஷா கோபமாகிவிட்டார். இனிமேல் தமிழ்நாட்டு விவகாரங்களைப் பற்றி என்னிடம் எதையும் கொண்டுவராதீர்கள், தமிழ்நாட்டில் பெரிய அளவு நாம் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால் அதற்கான முயற்சி இன்னும் பாதியளவு கூட தொடங்கப்படவில்லை' என்று கோபமும் ஆவேசமுமாக தேசிய பொறுப்பாளர்களிடம் இந்த ரிப்போர்ட்டை அடிப்படையாக வைத்து சொல்லியிருக்கிறார் அமித் ஷா. தமிழகத்தில் அ.தி.மு.க. பிளவுபட்டுள்ள நிலையில் யாருக்கு ஆதரவு என்ற விவாதத்தின் போதும், 'அதெல்லாம் யாரையும் நாம் ஆதரிக்க வேண்டாம். அவர்களுக்குள் அடித்துக் கொண்டு யார் மேலே வருகிறார்களோ அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என்று அமித் ஷா அண்மையில் கூறினார்.

இந்த பின்னணியில் தான் புதுக்கோட்டை பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, 'உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள். கட்சி ஜெயிக்க வேண்டுமென்றால் கட்சியின் அடிப்படை பூத் பலமாக அமைய வேண்டும். பூத் என்றால் ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். நீங்கள் இந்த கூட்டம் முடிந்து சென்று பூத் கமிட்டி அமையுங்கள். மோடியை பிடிப்பவர்கள், பா.ஜ.க.வை பிடிக்கிறவர்கள் என இருபது பேரைச் சேருங்கள். அது நாற்பதாகும். கட்சியை அடிப்படையில் ஆழத்தில் வளருங்கள். அனைத்து இடத்திலும் பூத்துகளுக்கு நபர்களைக் கொண்டுவர வேண்டும்' என்று பேசியிருக்கிறார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Aug 2022 9:17 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  3. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  4. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  5. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  7. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  8. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  9. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  10. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...