உளவுத்துறை சொன்ன தகவல்: முதல்வர் ஸ்டாலின் மனம் மாற காரணம் என்ன?

உளவுத்துறையும், கட்சியினரும் மேலிடத்திற்கு உண்மை தகவல்களை அனுப்பியதால், திமுக மேலிடம் மனம் மாறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உளவுத்துறை சொன்ன தகவல்: முதல்வர் ஸ்டாலின் மனம் மாற காரணம் என்ன?
X

ரேணுப்பிரியா பாலமுருகன்

தேனி- அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவிக்கு திமுகவின் சார்பில் ரேணுப்பிரியா பாலமுருகன் தான் வேட்பாளர் என்று அத்தனை பேரும் எதிர்பார்த்த நிலையில், திடீரென காங்., வேட்பாளர் சற்குணம் உள்ளே புகுந்து சூழ்நிலையை மாற்றினார். சற்குணத்தின் மகன் டாக்டர் தியாகராஜன் தனது செல்வாக்கால் காங்., மேலிட தலைவர்களை பிடித்து முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா, உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழா, தேர்தல் இட ஒதுக்கீடு தருணம் மூன்றும் ஒன்றாக வந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டார். ராகுல் முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்த ஒதுக்கீடு பட்டியலில் சத்தமில்லாமல் தேனியை சேர்த்துக் கொண்டார். ராகுலே நேரடியாக கேட்டதால் முதல்வர் ஸ்டாலினும் ஒப்புக்கொண்டார்.

அந்த தகவல் அறிந்து கலக்கமடைந்த தி.மு.க.,வினர் சுறுசுறுப்படைந்தனர். டாக்டர் தியாகராஜனுக்கும் அ.தி.மு.க.,வினருக்கும் இடையே இருந்த நெருங்கிய தொடர்புகள், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துடன் அவருக்கு இருந்த நெருக்கம், டாக்டர் வீட்டு நிகழ்ச்சிகளி்ல் அ.தி.மு.க.,வினர் பங்கேற்றது, அ.தி.மு.க., நிகழ்ச்சிகளில் டாக்டர் பங்கேற்றது, தி.மு.க.,வினரை டாக்டர் இதுவரை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து வந்தது, தவிர டாக்டர் மீது இருந்த போலீஸ் வழக்குகள், அதனை அவர் எதிர்கொண்ட விதம், தற்போது உள்ள புகார்கள் பற்றிய முழு விவரங்களையும் நேரடியாக முதல்வருக்கு அனுப்பி வைத்தனர். முதல்வர் உளவுத்துறை மூலம் இந்த தகவல்களை சரிபார்த்தார். உளவுத்துறையும் அந்த தகவல்களை உறுதிப்படுத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பியது. இதனால் முதல்வர் ஸ்டாலின் மனம் மாறியதாக தேனி மாவட்ட தி.மு.க.,வினர் தெரிவித்தனர். நேற்று காலை 9.45 மணி வரை தேனி நகராட்சிக்கு காங்., தலைவர் தான் என்ற நிலை இருந்தது. அதன் பின்னர் ஓரிரு நிமிடங்களில் நிலைமை மாறியது. இதற்கு மேலிடத்தில் இருந்து வந்த சிக்னல் தான் காரணம் என உளவுத்துறையும், தி.மு.க.,வினரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இருப்பினும், தி.மு.க., கவுன்சிலர்கள் அத்தனை பேரும், முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பிற்கு இணங்கி, சற்குணத்திற்கு ஓட்டுப்போடவே தயாராக இருந்தனர். ஆனால் சற்குணம் இந்த நிகழ்வுகளை அறிந்தோ என்னனோ திடீரென வேட்புமனு தாக்கல் செய்யாமல் வெளியேறி விட்டார். நொடிப்பொழுதில் சுதாரித்துக் கொண்ட தி.மு.க., ரேணுப்பிரியாவை சுயேட்சையாக களத்தில் இறக்கியது. தி.மு.க., சின்னத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டால் தலைமையின் பேச்சை மீறியதாக இருக்கும் என்பதாலேயே சுயேட்சையாக ரேணுப்பிரியா பாலமுருகன் களம் இறங்கினார். எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால், அவர் நகராட்சி தலைவர் பதவியை வென்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் டாக்டர் தியாகராஜன் மீண்டும் தனது காங்., படையுடன் சென்னை சென்று தமிழக காங்., தலைவர்கள் வழியாகவும், டெல்லி காங்., தலைவர்கள் வழியாகவும் முதல்வர் ஸ்டாலினிடம் இப்பிரச்னையை கொண்டு சென்றுள்ளார். ஏற்கனவே தேனி நிலவரம் பற்றி அறிந்த முதல்வர், ஸ்டாலின் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் நடந்த சம்பவங்களுக்கும் சேர்த்து ஒரு அறிக்கை விட்டதோடு நிறுத்திக் கொண்டார். தேனியில் சுயேட்சையாக நின்று வென்றதால் ஸ்டாலின் அறிக்கை தேனிக்கு பொருந்தாது என தி.மு.க., மேல்மட்ட தலைவர்களே கூறி வருகின்றனர். குறிப்பாக தேனிக்கு ரேணுப்பிரியா பாலமுருகன் தலைவராக தேர்வு செய்யப்பட்டதில் பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன், அமைச்சர் ஐ.பெரியசாமி உட்பட மேலிடத்தலைவர்களுக்கு நேரடி தொடர்பும் உள்ளது. இருப்பினும் இந்த நாடகத்தின் காட்சிகள் நொடிக்கு நொடி திருப்பங்களுடன் இருப்பதால் எந்த நேரம், என்ன நடக்குமோ என்ற பகீர் மனநிலையில் தான் தேனி மாவட்ட தி.மு.க.,வினரும், காங்., கட்சியினரும் உள்ளனர்.

Updated On: 2022-03-05T18:54:16+05:30

Related News

Latest News

 1. இந்தியா
  காங்கிரஸ் கட்சிக்கு அடிமேல் அடி! மூத்த தலைவர் திடீரென விலகல்
 2. தமிழ்நாடு
  பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ள மறுவடிவமைப்பு நிலையங்களின் மாதிரி படங்கள்...
 3. இந்தியா
  டீசல் பயன்பாடற்ற விவசாயம்: மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் வலியுறுத்தல்
 4. சினிமா
  இசையமைப்பாளர் அனிருத்துக்கு டும் டும்... மணப்பெண் யார்?
 5. ஈரோடு
  அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவராக திமுகவின் பழனிச்சாமி போட்டியின்றி...
 6. ஆன்மீகம்
  Kolaru Pathigam in Tamil கோளறு பதிகம் தமிழில்
 7. வழிகாட்டி
  தில்லி காவல்துறையில் தலைமைக் காவலர் பணி: தகுதியுடையோர்...
 8. இந்தியா
  ஒடிசா கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 5 வயது சிறுமியிடம் சில்மிஷம்: கைத்தறி தொழிலாளி கைது
 10. டாக்டர் சார்
  Aceclofenac and Paracetamol Tablet uses in Tamil அசெக்ளோஃபெனக்...