அழகான பெண்கள் குறித்து தி.மு.க எம்.எல்.ஏ காந்திராஜன் சர்ச்சை பேச்சு..!

ஏற்கனவே ஓராண்டுக்கு முன்பு, நானும் ரவுடி தான் என நடிகர் வடிவேலு பாணியில் கலாய்த்த வேடசந்தூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ., காந்திராஜன், தற்போது மாணவர்கள் மத்தியில், அழகான பெண்களுக்கு தான் அதிக ஊதியம் என பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அழகான பெண்கள் குறித்து தி.மு.க எம்.எல்.ஏ காந்திராஜன் சர்ச்சை பேச்சு..!
X

சர்ச்சை பேச்சுகளின் நாயகனாக திகழும் வேடசந்தூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ காந்திராஜன்.

தமிழகத்தில் உயர்கல்வி படிக்க வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதல்வர் சென்னையில் தொடங்கி வைத்தார். இதைத்தொட்ர்ந்து மாவட்டம் தோறும் பள்ளிக்கல்வி துறை சார்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திண்டுக்கல்லில் பள்ளிகல்வித்துறை சார்பில் உயர்கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிகழ்ச்சியில், வேடசந்தூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ., காந்திராஜன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், பணிக்கு பணியாளர்களை அமர்த்தும் பன்னாட்டு நிறுவனங்கள் அதற்கு விண்ணப்பித்தவர்களின் மார்க் எவ்வளவு என்பதை பார்க்க வேண்டும். ஆனால் அவ்வாறு பார்ப்பது இல்லை என குற்றச்சாட்டு சுமத்தினார்.

மேலும் அந்த நிறுவனங்கள் விண்ணப்பதாரரின் ஆங்கில அறிவுத்திறனை தான் சோதிக்கின்றனர் என்றும், உங்களுக்கு வாழ்க்கையில் அதிக சம்பளம் வேண்டும் என்றால், நீங்கள் சிறப்பாக ஆங்கிலம் பேசுபவர்களாக இருக்க வேண்டும் என்றும், பெண்களாக இருந்தால், அழகாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்து, கூடுதல் சம்பளமும் பன்னாட்டு நிறுவனங்களில் வழங்கப்படுவதாகவும் எம்.எல்.ஏ காந்திராஜன் பேசினார். அழகான பெண்கள் அதிக சம்பளம் வாங்க முடிகிறது என எம்.எல்.ஏ அரசு நிகழ்ச்சியில் பேசியது சர்ச்சையையும், சங்கடத்தையும் உண்டாக்கியுள்ளது.

இதுபோல இவர் பேசுவது இது முதன்முறை அல்ல. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், நான் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் நீ ரவுடி என்றால் நானும் ரவுடிதான் என்று பேசி சலசலப்பை ஏற்படுத்தினார், எம்எல்ஏ காந்திராஜன். இவர் வேடசந்தூர் அடுத்த வடமதுரையில் தமிழக அரசின் சார்பாக வரும் முன் காப்போம், இலவச மருத்துவ முகாம், ஆதரவற்ற பெண்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றை தலைமையேற்று நடத்தி வைத்தார்.

நலத்திட்டங்கள் வழங்கிய பின்னர் பேசிய காந்திராஜன், என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. அதை கண்டு நான் அஞ்ச மாட்டேன். நான் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் என்று சொன்னார். மேலும், நீ ரவுடி என்றால் நானும் ரவுடிதான் என்று ஆவேசமாக பேசிக்கொண்டே போனார். ஒருகட்டத்தில் எம்.எல்.ஏ கோபமாக பேசுகிறாரா? இல்லை காரணத்தோடு பேசுகிறாரா? என இதன் பின்னணி காரணத்தை தெரியாமல் கூட்டத்தினர் விழிக்க தொடங்கினர். அதற்கு பின்னர் தற்போதும் அழகான பெண்களுக்கு தான் அதிக சம்பளம் என பேசி சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார், எம்.எல்.ஏ காந்திராஜன்.

Updated On: 2022-07-04T16:36:45+05:30

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  வசியப்பொருத்தம் இருந்தால்தான் கணவன்-மனைவி காதல் மிளிரும்..! எப்டீன்னு...
 2. சினிமா
  பொன்னியின் செல்வன் படத்திற்காக இணையும் ரஜினி, கமல்: சும்மா அதிருமுல்ல
 3. சினிமா
  சகோதரியுடன் ரக்‌ஷாபந்தன் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் யாஷ்
 4. தமிழ்நாடு
  கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்
 5. சினிமா
  அதிதியை திட்டாதீங்க பிளீஸ்: பாடகி ராஜலக்ஷ்மி
 6. கல்வி
  பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம்: முதல்வர் ஆலோசனை
 7. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
 8. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 9. காஞ்சிபுரம்
  மின்தடையை சீர்செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு
 10. ஈரோடு
  பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் நீர்...