/* */

தீபாவளிக்கு முதல்நாள் பயணம்: அரசு விரைவு பேருந்துகளில் இன்று டிக்கெட் முன்பதிவு துவக்கம்

Diwali Festival -தீபாவளிக்கு முதல் நாள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் இன்று அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

HIGHLIGHTS

தீபாவளிக்கு முதல்நாள் பயணம்: அரசு விரைவு பேருந்துகளில் இன்று டிக்கெட் முன்பதிவு துவக்கம்
X

பைல் படம்.

Diwali Festival -தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய இரண்டு நாட்களும் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதிநாட்கள் விடுமுறையாக அமைந்துள்ளது. இதனால், மாணவர்கள், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் அக்டோபர் 21ம் தேதி இரவே தங்களது சொந்த ஊருக்குப் புறப்படத் தொடங்கி விடுவார்கள்.

இதற்காக வெள்ளிக்கிழமை பயணிப்போருக்கான முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து தீபாவளிக்கு முன்தினம் புறப்பட்டுச் செல்லும் சூழ்நிலையில் இருப்போர் இன்று முதல் பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும் tnstc.in என்ற இணையதளம், tnstc செயலி மற்றும் முன்பதிவு மையங்கள் வாயிலாக பயணச்சீட்டை முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ரயில் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்து விட்ட நிலையில் சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் பிரதான தேர்வாக பேருந்துகள் மட்டுமே உள்ளன. தீபாவளிக்கான பேருந்துகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே பெரும்பான்மையான டிக்கெட்டுகள் விற்று தீரிந்து விட்ட நிலையில் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Sep 2022 4:39 AM GMT

Related News