/* */

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது

தனக்கு திருமணம் நடந்ததை மறைத்து, அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி வீட்டுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்

HIGHLIGHTS

பள்ளி மாணவிக்கு பாலியல்  தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில்  கைது
X

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பள்ளி மாணவியை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள அமரப்பூண்டியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் நாட்ராயன்(30) என்பவர் தற்காலிக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில், அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை, தனக்கு திருமணம் நடந்ததை மறைத்து, அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி வீட்டுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஆசிரியர் நாட்ராயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், பழனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியர் நாட்ராயன், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 28 Nov 2021 2:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  2. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  3. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  4. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  5. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  7. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  8. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  9. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  10. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...