பழனி அருகே அரசு பேருந்து, லாரி நேருக்குநேர் மோதல்: 3 பேர் பலி

பழனி அருகே, அரசு பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பழனி அருகே அரசு பேருந்து, லாரி நேருக்குநேர் மோதல்: 3 பேர் பலி
X

விபத்தில் காயமடைந்து பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள்.

பழனியை அடுத்துள்ள தாழையூத்து அருகே, அரசு பேருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி ஒன்று, அரசு பேருந்து மீது மோதியது. இதில் அரசு பேருந்து பலத்த சேதமடைந்தது. பேருந்து மீது மோதிய லாரி சாலையில் கவிழ்ந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாமிநாதபுரம் போலீஸார், பேருந்தில் சிக்கி படுகாயமடைந்த லாரி டிரைவர் ராஜேஷ் உட்பட, 20 க்கும் மேற்பட்டோரை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில், பேருந்தில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

விசாரணையில், இறந்த மூவரில் ஒருவர் பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்ட பிரபு என்பதும், இன்னொருவர் அருப்புக்கோட்டை காரியாபட்டி அருகே உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ருக்கிரபாண்டி என்பதும் தெரியவந்தது. இறந்த மூன்றாவது நபரின் விபரம் குறித்தும் விபத்து குறித்தும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Sep 2021 4:45 AM GMT

Related News

Latest News

 1. தியாகராய நகர்
  தமிழகத்திற்கு 500 மின்சார பேருந்து : அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்
 2. அந்தியூர்
  அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை தடுப்பணை உடைந்து விவசாய பயிர்கள் சேதம்
 3. பாளையங்கோட்டை
  நெல்லையில் பாரம்பரிய சரிவிகித உணவு திருவிழா கண்காட்சி
 4. கூடலூர்
  நீலகிரி முதுமலையில் வெளுத்து வாங்கிய கனமழை
 5. சென்னை
  சென்னையில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்...
 6. சென்னை
  சென்னை மாவட்டத்தில் 23ம் தேதி 141 பேருக்கு கொரோனா
 7. கோயம்புத்தூர்
  கோயமுத்தூர் மாவட்டத்தில் 23ம் தேதி 132 பேருக்கு கொரோனா
 8. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் 23ம் தேதி 12 பேருக்கு கொரோனா
 9. குளித்தலை
  மருதூர் பேரூராட்சியில் சாலை வசதி கோரும் பொதுமக்கள்
 10. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் 23ம் தேதி 20 பேருக்கு கொரோனா