/* */

சுற்றுலா தலங்களுக்கு தடை-கொடைக்கானல் வெறிச்சோடியது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிசோடி காணப்பட்டது .

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது .இங்கு ஆண்டுக்கு பல ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வருகை தருவார்கள்.கொடைக்கானலில் சுற்றுலாவை நம்பியே பெரும்பாலான மக்கள் இருந்து வருகின்றனர் .இந்நிலையில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தாக்கத்தால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு சுற்றுலாப்பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .தற்போது தமிழக அரசு சார்பில் சுற்றுலாவிற்கு எந்த ஒரு தளர்வும் அறிவிக்கப்படாததால் சுற்றுலாவை நம்பி உள்ள மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர் .

இதனை தொடர்ந்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட் ,குணாகுகை ,பில்லர்ராக் ,பைன் மரக்காடுகள் ,பேரிஜம் ஏரி , மற்றும் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா , செட்டியார் பூங்கா , ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் சுற்றுலாப்பயணிகள் இன்றி வெறிசோடி காணப்பட்டது .எனவே தமிழக அரசு சுற்றுலாவிற்கு தகுந்த கட்டுப்பாடுகள் விதித்து சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டுமென உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாவை நம்பி உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 21 April 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?