அனுமதியின்றி சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

கள்ளிமந்தயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அனுமதியின்றி சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
X

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே  அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டஞ்சத்திரம் பகுதியில் சட்டவிரோதமாக அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்

திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.ஆர். ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில், கள்ளிமந்தயம் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் காவல் நிலைய கொல்லப்பட்டி வலசு கரியாம்பட்டி பகுதியில் சந்தேகத்தின் பேரில் கருப்பையா (எ)வெள்ளைச்சாமி(40) என்பவரின் வீடு மற்றும் தோட்டத்தை சோதனை செய்தபோது, தோட்டத்தில் நாட்டுத்துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, வெள்ளைச்சாமி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் அவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 19 Oct 2021 4:15 PM GMT

Related News