/* */

நத்தம் அருகே கார்த்திகைக்காக வித விதமான அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

கொரோனா தொற்று காரணமாக விற்பனை குறைவாக இருந்ததாகவும் தற்போது தளர்வுகள் உள்ளதால் விற்பனை நன்றாக உள்ளதாகவும் தெரிவித்தனர்

HIGHLIGHTS

நத்தம் அருகே கார்த்திகைக்காக  வித விதமான அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்
X

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கார்த்திகைக்காக மண்ணால் ஆன வித, விதமான தீப விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருக்கார்த்திகை நாளன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். இதற்காகவே நத்தம் அருகே நொச்சிஓடைப்பட்டியில் வருடந்தோறும் மண்ணால் ஆன விளக்குகளை தயாரித்து திண்டுக்கல், மதுரை,திருச்சி, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

இங்கு லட்சுமி விளக்கு, பிள்ளையார் விளக்கு, மேஜிக் விளக்கு ,அன்னம் விளக்கு, மயில்விளக்கு, குத்து விளக்கு,அடுக்கு விளக்கு உள்ளிட்ட 50 வகையான மாடல்களில் விதமான விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை ஒரு ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக விற்பனை குறைவாக இருந்ததாகவும் தற்போது தளர்வுகள் உள்ளதால் விற்பனை நன்றாக உள்ளதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.பொது மக்களும் விளக்குகளை ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். கார்த்திகை திருநாள் நெருங்கி வருவதால் மண்விளக்கு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 12 Nov 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?