நத்தம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேரும் படுகாயமடைந்தனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நத்தம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி
X

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே இரு சக்கரவாகனங்கள் மோதிக்கொண்ட காட்சி

நத்தம் அருகே குட்டூர் பேருந்து நிறுத்தம் முன்பாக இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியானது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே குட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கணவன்,மனைவி உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் உடையநாதபுரத்தை சேர்ந்த நாகராஜன் என்பவர், தனது மனைவி மணிமேகலையுடன் உலுப்பகுடியில் உள்ள தனது மனைவி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது குட்டூர் பேருந்து நிலையம் எதிரே, திம்மநல்லூர் பள்ளப்பட்டி சேர்ந்த சின்னையா என்பவர் ஒட்டி வந்த இருசக்கர வாகனமும், நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேரும் படுகாயமடைந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த நத்தம் போலீசார் காயமடைந்த 3 பேரையும் நத்தம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவ்விபத்தில் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியபோது வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பதற வைக்கும் சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

Updated On: 28 Oct 2021 7:45 AM GMT

Related News