1.5 கோடி செலவில் கட்டப்பட்ட பேருந்து நிலையம்: 7 ஆண்டுகளாகியும் திறக்கப்படவில்லை

புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வருவதற்கு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
1.5 கோடி செலவில் கட்டப்பட்ட பேருந்து நிலையம்: 7 ஆண்டுகளாகியும் திறக்கப்படவில்லை
X

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செந்துறையில் 1.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் 7 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் ரேஷன் கடையாக செயல்படும் அவலம் தொடர்கிறது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செந்துறையில் 7 ஆண்டுகளுக்கு முன் சுமார் 1.5 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட்7 ஆண்டுகளுக்கு பின்னும் திறக்கப்படாததால் ரேஷன் கடை இயங்கிவருகிறது.

நத்தம் அருகேயுள்ள செந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20 -க்கும் மேற்பட்ட கிராமங்களின் உள்ளன இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு செந்துறை மையப் பகுதியாக உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர் செல்வதற்கு செந்துறை பேருந்து நிலையத்திற்கு தான் வரவேண்டும்.

செந்துறை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உள்ள இடத்தில் குள்ள பஸ்ஸ்டாண்டில் இடவசதி போதுமான இல்லாததால் 7 ஆண்டு களுக்கு முன்பு ஊராட்சி மன்ற அலுவகத்தில் இருந்து. அரை கிலோமீட்டர் தூரத்தில் புதிதாக 1.5கோடிக்கு மேல் செலவு செய்து புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இதில் இருபதிற்கும் மேற்பட்ட வணிக வளாகம், கழிவறைகள், மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள் தேவையான வசதிகளுடன் உள்ளது.

ஆனால் 7 ஆண்டுக்கு பின்பும் திறக்கப்படாததால் தற்பொழுது பேருந்து நிலையப்பகுதியில் கட்டப்பட்ட வணிக வளாகத்தில் 2 கடையில் ஒருமாதமாக ரேஷன் கடை செயல்படுகிறது. மற்றபடி இந்த வளாகம் இரவு நேரங்களில் மதுபிரியர்களின் பார் ஆகவே செயல்படுகிறது. சமூக விரோதிகள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும்,கட்டடங்கள் சேதப்படுத்தியும், மின் வயர்களை திருடி வருகின்றனர்.பெரும்செலவு செய்து கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்கள் வருவதில்லை.ப ழைய பஸ் ஸ்டாண்ட் நெருக்கடியாக உள்ளது.

எனவே, புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டப்பட்ட நிலையில் சேதமடைவது தொடர்கதையாகி வருகிறது, மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் திறக்கப்படாததால் மக்களுக்காக செந்துறை பகுதியில் ஒதுக்கப்பட்ட நிதி விரயமாகி உள்ளது. இந்நிதியை வேற ஏதாவது பயன்பாட்டிற்காக பயன்படுத்தி இருக்கலாம். புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் முழுமையாக சிதலமடைந்து மக்கள் பணம் விரயமாவதை தடுக்க புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வருவதற்கு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Updated On: 27 Dec 2021 12:50 PM GMT

Related News