Begin typing your search above and press return to search.
நத்தம் அருகே 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு உயிருடன் பிடிபட்டது
நத்தம் அருகே 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
HIGHLIGHTS

கண்ணாடி விரியன் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோபால் பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ். ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது வீட்டு அருகில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் தீயணைப்பு துறையினர் ராஜேஷின் வீட்டின் அருகே பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.