சாணார்பட்டி அருகே 5 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல்: 3 பேர் கைது

துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலியாக சாணார்பட்டி அருகே 5 கள்ளத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சாணார்பட்டி அருகே 5 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல்: 3 பேர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் கைது செய்யப்பட்டோருடன் போலீசார்.

திண்டுக்கல் ஊரக உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமலை, நத்தம், சாணார்பட்டி, தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளத்துப்பாக்கி தேடுதல் வேட்டையில் தனிப்படைப்படை போலீசார் ஈடுபட்டனர்.

காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன், காவல் உதவி துணை கண்காணிப்பாளர் முருகன், இமானுவேல்ராஜ்குமார், ரவிச்சந்திரன் 4 டிஎஸ்பி.,கள் தலைமையில் 8 ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 125 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது கவராயன்குளம், தவசிமடை, சாணார்பட்டி, நத்தம், வெள்ளோடு, சிறுமலை நாட்டுத் துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு ஏர்கன் மற்றும் எஸ்.பி.பி. எல் துப்பாக்கி 3 உட்பட 5 துப்பாக்கிகள் மற்றும் கரி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்து சாணார்பட்டி காவல் நிலையம் கொண்டு வரப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன், சிறுமலை நத்தம் சாணார்பட்டி தாலுகா காவல் நிலையங்கள் உள்ள தனியாக வீடுகள் மலைப்பிரதேசங்கள் போன்ற கள்ளத்துப்பாக்கி உள்ளதா என சோதனை செய்யப்பட்டது. அதில் 2 ஏர்கன் மற்றும் எஸ்.பி.பி. எல் மொத்தம் 5 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வருவாய் துறையினருடன் இணைந்து மலைக்கிராமங்களில் இதுபோன்று துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் வேட்டைக்குப் பயன்படுத்தும் துப்பாக்கிகள் வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Updated On: 6 Jan 2022 2:55 AM GMT

Related News