நத்தம் அருகே அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நத்தம் அருகே அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி
X

நத்தம் அருகே அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார்(27). இவர் வெளிநாட்டில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு சொந்த வேலையாக சென்று மீண்டும் காசம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது வேம்பரளி பகுதியில் சென்ற போது நத்தத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து அவர் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துடிதுடித்து இறந்து போனார். மேலும் அவர் ஓட்டி வந்த வாகனம் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமானது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 Aug 2021 1:50 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்
 2. தர்மபுரி
  இல்லம்தோறும் மூவர்ணக் கொடி: ஏர்ரப்பட்டியில் மாணவிகளின் விழிப்புணர்வு...
 3. வழிகாட்டி
  நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
 4. சினிமா
  செல்லத்தை மறக்காத பிரகாஷ் ராஜ்; விஜய் ரசிகர்கள் குஷி
 5. பொள்ளாச்சி
  மாசாணியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 67 லட்சம்
 6. விழுப்புரம்
  விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடல்
 7. விழுப்புரம்
  மாணவி ஸ்ரீமதி கொலை வழக்கில் தாளாளர் உட்பட 5 பேருக்கு காவல் நீட்டிப்பு
 8. விழுப்புரம்
  கள்ளக்குறிச்சி: அரசு பஸ் நடத்துனர், ஓட்டுனர் சஸ்பெண்ட்
 9. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
 10. பல்லடம்
  செல்போன் டவர் அமைப்பதாக மோசடி; வாலிபர் கைது