/* */

பெயரை மாற்றியதாக கூறி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண் போராட்டம்

தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண் அதிர்ச்சி. தனது பெயரை வேறு ஒரு வார்டுக்கு மாற்றி உள்ளதாக கூறி போராட்டம்.

HIGHLIGHTS

பெயரை மாற்றியதாக கூறி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண் போராட்டம்
X

ஏஞ்சலின் ஓவியா தனது தந்தை அம்புரோஸ் உடன் தரையில் அமர்ந்து போராட்டம்.

திண்டுக்கல் மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண் தனது பெயரை வேண்டுமென்றே திமுகவினர் வேறு ஒரு வார்டுக்கு மாற்றி உள்ளதாக கூறி போராட்டம் செய்தார்.

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட நாற்பத்தி எட்டு வார்டுகளில் உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய 55 உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 10 வார்டுகளுக்கு ஒரு உதவித் தேர்தல் அலுவலர் என்ற வகையில் பிரிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியைச் சேர்ந்த ஏஞ்சலின் ஓவியா தனது தந்தை அம்புரோஸ் உடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரின் பெயரும் 19வது வார்டில் உள்ளதாகவும் வேட்பாளராக போட்டியிடும் ஏஞ்சலின் ஓவியா என்னும் தனது பெயர் மட்டும் 32வது வார்டு பட்டியலில் சேர்த்துள்ளதாக ஒரு மாநகராட்சி தேர்தல் அலுவலர் சிவ சுப்பிரமணியத்திடம் புகார் அளித்தார்.

புகாரை சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுக்க கூறியுள்ளார். இதையடுத்து வேட்பாளர் தனது மனுவை அதிகாரிகள் ஏற்க மறுப்பதாகவும், திமுகவை சேர்ந்த நபர்கள் என்னுடன் போட்டியிட்டால் தோற்றுப் போய் விடுவார்கள் என்ற பயத்தில் எனது பெயரை வேறு வார்டுக்கு மாற்றி உள்ளனர் என்று கூறி, இதனை சரி செய்து தரும்படி தேர்தல் அலுவலரிடம் மனு அளிக்க வந்த போது அதனை ஏற்க மறுத்து அலைக்கழிப்பு செய்வதாக கூறி அவரது தந்தையுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வேட்பாளரின் தந்தை அன்பு ரோஸ் கூறுகையில், திமுகவினர் வேண்டுமென்றே தனது மகளின் பெயரை வேறு வார்டுக்கு மாற்றியுள்ளனர். தனது மகள் வெற்றி பெற்று மேயராக வந்து விடுவார் என்ற பயத்தில் இதுபோன்று செய்துள்ளனர்.

இது தொடர்பாக புகாரை அதிகாரிகள் வாங்க மறுப்பதால் மீண்டும் வேட்பாளரின் பெயரை 19-வது வார்டுக்கு மாற்றாவிட்டால் நீதிமன்றம் செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 28 Jan 2022 10:43 AM GMT

Related News