/* */

திண்டுக்கல்லில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 பேர் போஸ்கோ சட்டத்தில் கைது

திண்டுக்கல்லில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 பேர் போஸ்கோ சட்டத்தில் கைது
X

திண்டுக்கல் : கோவை மாவட்டம் துடியலூர் அருகேயுள்ள கண்ணப்பநகரை சேர்ந்தவர் கோகுல்(22). இவரும், 17 வயது சிறுமியும் காதலித்தனர். அதை பெற்றோர் எதிர்த்ததால் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லுக்கு வந்தனர். அவர்களுக்கு உதவியாக 16 வயது சிறுவன், 17 வயது சிறுமி ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் உடன் வந்தனர். இவர்கள், திண்டுக்கல்லை சேர்ந்த சிலரின் உதவியுடன் மொட்டணம்பட்டி எம்.ஜி.ஆர்.நகரில் பதுங்கி இருந்தனர். மேலும் காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே காதல் ஜோடியின் இருப்பிடத்தை அறிந்து துடியலூர் போலீசார் திண்டுக்கல்லுக்கு விரைந்து வந்தனர்.

ஆனால், போலீசார் வருவதை அறிந்த காதல் ஜோடி தப்பிவிட்டது. அதேநேரம் காதல் ஜோடிக்கு உதவிய சிறுமி, சிறுவன் உள்பட 5 பேர் போலீசாரிடம் சிக்கினர். இதைத் தொடர்ந்து 5 பேரையும் பிடித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் சிறுமியுடன் சிக்கிய பேகம்பூர் பகுதியை சேர்ந்த முகமதுஅலி ஜின்னா(26), ஆர்.வி.நகரை சேர்ந்த அலெக்சாண்டர் (22) ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 11 Jun 2021 2:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  2. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  3. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  4. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  5. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  6. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  7. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  8. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  9. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  10. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!