/* */

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் இந்த ஆண்டு பூக்குழி இறங்கத் தடை

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்

HIGHLIGHTS

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் இந்த ஆண்டு பூக்குழி இறங்கத் தடை
X

 திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில்

பிரசித்தி பெற்ற திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் இந்த ஆண்டு பூக்குழி இறங்குதல் மற்றும் அங்கப்பிரதட்சணம் ஆகிய நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

உலக பிரசித்தி பெற்ற திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு கோயில் வளாகத்திலேயே திருவிழா நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் கொரானா நெறிமுறைகள் படி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கோவிலுக்குள் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நாளை மறுநாள்(28.01.22) பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. வழக்கமாக பூச்செரிதல் விழாவிற்கு பூத்தேர் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வரும்.

ஆனால் இந்த ஆண்டு பூத்தேர் செல்வதற்கு அனுமதி இல்லை. அதேபோல் கோவிலில் வணிக வளாகங்கள், ராட்டினம் ,கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நான்கு தினங்களில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். பக்தர்களின் நேர்த்திக் கடன்களில் அங்கப்பிரதட்சணம் செய்வது, கோவில் வளாகத்தில் உடல் பாகங்களில் மாவிளக்கு ஏற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. பெண்கள் கோவில் கொடி கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றும் நேரம் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே அனுமதிக்கபடுவார்கள்.

கோவில் திறந்திருக்கும் நாட்களில் இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். வரும் ஞாயிற்றுக்கிழமை (30.01.22) சாமி சாட்டுதல் நிகழ்வு, (01.02.22)கொடியேற்றம் நடைபெற உள்ளது.இந்த ஆண்டு கோவில் வளாகத்தில் 11.02.22ந்தேதி நடைபெற இருந்த பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

முக்கிய நிகழ்வாக 12.02.22 அன்று தசாவதாரம், 13.02.22 அன்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெறும். 14.02.22 அன்று ஊஞ்சல் உற்சவமும், 15.02.22 தெப்ப உற்சாகத்துடன் மாசிப் பெருந்திருவிழா நிறைவடையும்.நிகழ்வுகள் அனைத்தும் அரசு வழிகாட்டு நெறிகளை பின்பற்றி நடைபெற உள்ளது. அதேபோல் ஆண்டு தோறும் மண்டகப்படிதரார்களின் உற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு உற்சவர் வெளியே செல்ல அனுமதி இல்லாததால் சாமி உற்சவம் தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அரசின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு முககவசம் சமூக இடைவெளியை பின்பற்றி முழு ஒத்துழைப்பு தந்து கோயில் வளாகத்திற்குள் வரவேண்டுமென கோவில் அறங்காவலர் குழு கேட்டுக் கொண்டுள்ளதாக சுபாஷினி.(தலைவர் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு) தெரிவித்தார்.


Updated On: 26 Jan 2022 4:29 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?