/* */

பாதுகாப்பு உபகரணமின்றி கழிவுநீர் சுத்தம்: அதிகாரி முன்னிலையில் ஊழியர்களின் அவலம்

மாநகராட்சி உயர் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பு உபகரணமின்றி ஆபத்தான கழிவுநீர் ஓடைக்குள் இறங்கி ஊழியர்கள் சுத்தம் செய்த அவலம் நடைபெற்றுள்ளது.

HIGHLIGHTS

பாதுகாப்பு உபகரணமின்றி கழிவுநீர் சுத்தம்: அதிகாரி முன்னிலையில் ஊழியர்களின் அவலம்
X

திண்டுக்கல்லில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஆபத்தான கழிவுநீர் ஓடைக்குள் இறங்கி சுத்தம் செய்த ஊழியர்கள்.

திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 24 வார்டுகளில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் நடந்து முடிவடைந்துள்ளது.

பாதாள சாக்கடை திட்டம் கடந்த திமுக ஆட்சியின்போது துவங்கப்பட்ட இந்த திட்டமானது முழுமையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் இல்லாத காரணத்தினால் அன்றைய திமுக ஆட்சியிலேயே பாதியில் நகர் பகுதி முழுவதும் இத்திட்டம் கைவிடப்பட்டது.

பாதாள சாக்கடை போடப்பட்ட இடங்களும் முறையான திட்டமிடல் இல்லாததால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு குழாய்கள் உடைந்து கழிவுநீர் நகர்ப்பகுதி முழுவதும் ஆங்காங்கே பெருக்கெடுத்து ஓடிவருகிறது.

இதன் காரணமாக இன்று திண்டுக்கல் மையப் பகுதியான கிழக்கு ரத வீதியில் உள்ள கழிவு நீர் ஓடையில் கழிவுநீர் செல்ல முடியாத காரணத்தினால் சாலைகளில் கழிவுநீர் ஓட ஆரம்பித்தது.

பல நாட்களாகியும் இதனை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டி வந்த நிலையில் இன்று கழிவு நீரோடையை சரி செய்யும் விதத்தில் தூய்மை பணியாளர்களை கொண்டு சாலையை உடைத்து கழிவு நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது பணியில் ஈடுபடுத்தப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் கழிவுநீர் ஓடைக்குள் வெறும் கை மற்றும் வெறும் கால்களில் உள்ளே இறங்கி மது பாட்டில்கள், மனித மலக்கழிவுகள் ,துணி கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கைகளில் அள்ளி வெளியே எடுத்துப் போடும் அவலமானது நடைபெற்றது.

இதனை மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடைக்கு மேல் நின்று கொண்டு வேடிக்கை பார்க்கும் நிகழ்வும் நடைபெற்றது. தூய்மை பணியாளர்கள் அடைப்புகளை சுத்தம் செய்யும் பொழுது அதில் இருந்து வெளிவரக்கூடிய வாய்வானது (கேஸ்) சில நேரங்களில் உயிரைப் பறிக்கக் கூடிய சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

தூய்மை பணியாளர்கள் முகக்கவசம், கையுறை, காலுறை உள்ளிட்ட எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் கழிவுநீர் அடைப்புகளை சுத்தம் செய்யும் பணியானது அவ்வழியே செல்லக்கூடிய பொதுமக்களை வேதனையடைய செய்தது.

உயிர்பலி ஈடுபடும் முன்பு தூய்மை பணியாளர்களுக்கு முறையாக பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி இது போன்ற பணிகளில் ஈடுபட வைக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 6 Jan 2022 2:29 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்